தமிழ் சினிமாவில் வெற்றிகரமான சிறந்த தம்பதிகள் என்றால் அஜித்–ஷாலினி என்று கூறலாம். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் இவர்களிடையே காதல் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 2000-வது ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
unknown nodeஇந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து நேற்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
unknown nodeஇந்நிலையில் நேற்று 23 வது ஆண்டு திருமண நிறைவு விழாவை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர். அப்போது அஜித் ஷாலினியை கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படத்தை ஷாலினியின் சகோதரி ஷாம்லி வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown nodeஅஜித் தற்போது வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.