பைக் ஓட்டுவதில் தல அஜித் கில்லாடி – ஹூமா குரேஷி..!

Actress Huma Qureshi has said that Ajith is good at riding a bike.

அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி என்று நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை .இதனால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷியிடம் சமீபத்தில் பல கேள்விகள் கேட்டகப்பட்டது, அப்போது ஒருவர் வலிமை படத்தில் அஜித்திற்கு இணையாக பைக் ஒட்டினீர்களா என்று கேட்டதற்கு, ” நான் சும்மா ஆக்ட் கொடுத்தேன் படத்தில் நடிப்பதற்காக கற்றுக்கொண்டேன். ” அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அஜித் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார் என்றும் கூறியுள்ளார்.