பால் என நினைத்து தயிரை திருடிய அஜித் ரசிகர்கள்..!

ரோகினி திரையரங்கில் 'வலிமை' பட கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்ய அஜித் ரசிகர்கள் பால் என நினைத்து ஆவின் வண்டியிலிருந்து தயிரை திருடிஉள்ளனர்.

ரோகினி திரையரங்கில் ‘வலிமை’ பட கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்ய அஜித் ரசிகர்கள் பால் என நினைத்து ஆவின் வண்டியிலிருந்து தயிரை திருடிஉள்ளனர்.

நடிகர் அஜித்   ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கிய ‘வலிமை’ படத்தில்  நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இன்று  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.

இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சியை பார்க்க பல திரையரங்குக்கு அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, ரசிகர்கள்  பட்டாசுகள் வெடித்து,  அஜித்தின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.  இந்நிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகினி திரையரங்கில் ‘வலிமை’ பட கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்ய அந்த வழியாக சென்ற ஆவின் வண்டியிலிருந்து அஜித் ரசிகர்கள் பால் என நினைத்து  தயிரை திருடிஉள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.