மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் அஜித் ரசிகர்கள்! குவியும் பாராட்டுக்கள்!

They cleaned up a mentally ill person, had a haircut for him, and enjoyed wearing putty. The public has been appreciative of their service.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சுத்தப்படுத்தி, அவருக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். இவர்களது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ள நிலையில், அவர்கள் மக்களுக்கு தங்களால் என்ற வரை சமூக சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட அஜித்குமார் ரசிகர் மன்றத்தினர், மக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்ற நிலையில், வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில், ஒவ்வொரு ஊராக சென்று, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களை தேடி செல்கின்றனர்.

இதனையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்களை மீட்டு, குளிக்க வைத்து, சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில், தெருவில் சுற்றி திரிந்த, மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சுத்தப்படுத்தி, அவருக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். இவர்களது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுபோல, இவர்கள் விபத்தில் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குதல், மரம் நடுதல் போன்ற சமூக பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.