வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் தல ரசிகர்கள்.!

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ளார்  திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடபட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

unknown node