ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் இரண்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையும் , வித்தியாசமான படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘திட்டம் இரண்டு’.
சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத் குமார் ஆகிய இருவர் தயாரிக்கும் இந்தப் படத்தினை வினோத் கார்த்திக் இயக்கியுள்ளார்.இவர் ‘யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி’ என்ற குறும்படத்தை இயக்கி பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திகிலுடன் கூடிய மர்மங்கள் நிறைந்த படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.கோகுல் பினாய் படத்தின் ஒளிப்பதிவை செய்ய, சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார்.சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.அதனை திட்டம் இரண்டு படத்தின் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node