அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள்! வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்...

தவறான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா.

தவறான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா.

அமிதாப் பச்சனின் பேத்தியும், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மகளுமான ஆராத்யா பச்சன், தனது உடல்நிலை குறித்து ‘போலி செய்தி’ வெளியிட்டதற்காக யூடியூப் சேனல்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

unknown node

தனது மனுவில், 11 வயதான ஆராத்யா, தான் மைனர் என்பதால், தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை கோரியுள்ளார். இதற்கான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

unknown node

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் 2007 இல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2011 நவம்பர் 16, அன்று அவர்களது பெண் குழந்தை ஆராத்யாவை வரவேற்றனர்.  ஆராத்யா சமீபத்தில், நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடந்த இந்தியாவின் ஃபேஷன் வெளியீட்டு விழாவில் முதல் முறையாக, தனது தாயார் ஐஸ்வர்யாவுடன் காணப்பட்டார்.