தெலுங்கு படத்தின் டீசரை பார்த்து விட்டு படக்குழுவினரை கால் செய்து பாராட்டிய தல அஜித்.!

Thala Ajith has left the teaser of the Telugu film Ide Maa Katha and praised the crew.

தெலுங்கு படமான இதே மா கதா படத்தின் டீசரை தல அஜித் பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர் .இந்த நிலையில் தற்போது தல அஜித் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தெலுங்கில் குரு பவண் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘இதே மா கதா’.சுமந்த் அஸ்வின், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் பைக் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது .இந்த படத்தின் டீசரை தல அஜித் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு கால் செய்து பாராட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர் .இந்த படத்தின் டீசரை குறித்து அஜித் கூறியதாவது,எனது நீண்ட கால நண்பர் ராம் பிரசாத் என்னிடம் இத்திரைப்படத்தின் டீசரை காட்டினார். எனக்கு டீசர் மிகவும் பிடித்திருந்தது. உண்மையிலேயே படத்தின் காட்சிகள் அனைத்தும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.எனக்கு பைக் ரைடிங் பிடிக்கும். அதனால் என்னை எளிதில் டீசருடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. விரைவில் தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என நம்புகிறேன்.படக்குழுவினர் அனைவரும் வெற்றியடைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் .

இது குறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது சமீபத்தில் வெளியான இதே மா கதா படத்தின் டீசரை பார்த்து கொண்டு தல அஜித் படக்குழுவினரை பாராட்டியதாகவும்,அவரது பாராட்டு படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கை மற்றும் உத்வேகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர் படக்குழுவினர் சார்பாக நடிகர் அஜித்திற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் .