சுல்தான் ரெட்டை விருந்தாக வந்திருக்கிறது – சுரேஷ் காமாட்சி.!!

After watching the movie Sultan, producer Suresh Kamatchi praised it on his Twitter page.

சுல்தான் படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திகிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான விர்சனத்தை பெற்று வருகிறது. கார்த்தி ரசிகர்கள் சிலர் கைதியை தொடர்ந்து இந்த திரைப்படம் அவருக்கு 100 கோடி வசூல் கொடுக்கும் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறிவருகிறார்கள்.

இந்த படத்தை கார்த்தி ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் சினிமா பிரபலங்களும் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் “ஆக்ஷன் மாஸ்னா கார்த்தி ப்ரோ பட்டைய கிளப்புவார். சுல்தான் படம் ரெட்டை விருந்தாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

unknown node