ஆண்டவருக்கு பிறகு நம்ம அண்ணாச்சி தான்.! சிறப்பான சம்பவம் லோடிங்...

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது "தி லெஜெண்ட்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார்கள்.

unknown node

அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் , இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாடிவாசல் வாடி என்ற இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது. அதனை தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா வரும் மே 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

unknown node

அதில், பாடல்களும், ட்ரெயிலரும் வெளியிடப்படவுள்ளது. இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கான ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா கடந்த 15-ஆம் தேதி இதே நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

unknown node

கமலுக்கு அடுத்ததாக, அண்ணாச்சி நடித்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா அதே அரங்கத்தில் நடைபெறுகிறது. எனவே, இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பல முன்னை பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.