2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி.!

Director Lingusamy is next to direct the film with Telugu actor Ram Potheneni.

இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராம் பொத்தெனியை வைத்து படம் இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் லிங்குசாமி.ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன்,கும்கி உள்ளிட்ட ஒரு சில படங்களையும் தயாரித்து வந்தார்.

கடைசியாக சண்டைக்கோழி-2 படத்தினை இயக்கிய இவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு படத்தினையும் இயக்காத நிலையில் தற்போது தெலுங்கு படமொன்றை இயக்க உள்ளார்.ஆம் லிங்குசாமி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொத்தெனி நடிக்க உள்ளார்.ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பினை தொடங்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .மேலும் இந்த படத்தினை வரும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node
2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி.!