Aditi Shankarவிருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஷங்கரின் இளைய மகள் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும் நடித்து கொன்டும் வருகிறார். விருமன் படத்திற்கு பிறகு அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்த படங்களில் எல்லாம் நடிக்கிறார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
READ MORE –முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?
முதன் முதலாக கார்த்தியுடன் நடித்த நடிகை அதிதி ஷங்கர் சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் பிறகு அது வெறும் வதந்தியான தகவல் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தற்போது நடிகை அதிதி ஷங்கர் அண்ணன் – தம்பி என இரண்டு ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வருகிறார்.
READ MORE –இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!
அதன்படி, தற்போது அவர் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் தான் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு சைலண்டாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாகவும், படத்தில் அதிதி நடிப்பதாகவும்அதிகாரப்பூர்வமாகவேஅறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் ஆகாஷின் அண்ணனான அதர்வாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.
read more-அந்த மாதிரி காட்சியில் தயக்கம்…’எனக்கில்ல ஹீரோக்கு’! ரியா சுமன் ஓபன் டாக்!!
இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கும் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் தான் நடிகை அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். தொடர்ச்சியாக இப்படி பல படங்களை அதிதி ஷங்கர் கமிட் செய்து வருவதன் காரணமாக கண்டிப்பாக அவருடைய மார்க்கெட்டும் உயரப்போகிறது என்பதில் எந்த சந்தகேமும் இல்லை.
