களவாணி பட இயக்குனருடன் கைகோர்க்கும் அதர்வா – ராஜ்கிரண்..!

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக  ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக  ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக  ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது. இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே சுரேஷ் போன்றோர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

unknown node