“சும்மா வாய மூடுங்க”…ஜெயம் ரவி விவகாரத்து குறித்த கேள்வி? கடுப்பாகி சீறிய வனிதா!
சம்பந்தமே இல்லாமல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் ஜெயம் ரவி விவாகரத்து பற்றி கேள்விகேட்டதால் நடிகை வனிதா கடுப்பாகி கேள்வி கேட்டவரை திட்டியுள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி விவாகரத்தும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த விஷயம் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை வனிதா பத்திரிகையாளரைத் திட்டியுள்ளார். ஏனென்றால், அந்த அளவுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைப் பத்திரிகையாளர் கேட்டுள்ளார்.
அதாவது, வனிதா இப்போது தில் ராஜா என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், வனிதா கலந்துகொண்டார். அப்போது அவரிடம், பத்திரிகையாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவரும் பதில் அளித்தார்.
அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் என்ன கேட்கலாம் எனத் தெரியாமலே ஜெயம் ரவி விவாகரத்து விஷயம் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் நீங்கள் படத்தை வெளியிட்டால் படத்திற்கு ஒரு விளம்பரமாக இருக்கும் என்பதால் படத்தை ரிலீஸ் செய்கிறீர்களா? எனக் கேட்டார்.
Read More- “ஜெயம் ரவியுடன் காதல் இல்லை..இனி நடந்தால் நீங்க தான் காரணம்” – கெனிஷா பரபரப்பு!
இந்த கேள்வியைக் கேட்டவுடன் வனிதாவின் முகம் கோபமாக மாறியது ஆனால், அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் ” நீங்கக் கொஞ்சம் வாய மூடுங்கள் இது என்ன கேள்வி? அதுக்கும் இதுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்த படம் எடுத்துக் கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிறது. எனவே, அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” என வனிதா தெரிவித்தார்.
சாதாரணமாக தன்னிடம் கேள்விகள் கேட்டாலே வனிதா மிகவும் கோபத்துடன் தான் பதில் அளிப்பார். இருப்பினும், சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு கேள்வியைப் பத்திரிகையாளர் கேட்டுள்ளது வனிதாவைப் பெரிய அளவில் கோபப்படுத்தவில்லை..அப்படிக் கோபப்படுத்தி இருந்தால் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் கதி அதோகதி தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.