காதல் திருமணம் குறித்து நினைத்து பார்த்தது கூட இல்லை – வாணி போஜன்..!

Actress Vani Bojan has said that she never even thought about romantic marriage.

காதல் திருமணம் குறித்து நான் நினைத்து பார்த்தது கூட இல்லை என்று நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

நடிகை வாணி போஜன் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சீயான் 60 படத்திலும், பரத்துக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் அவரிடம் உங்களிற்கு காதல் அனுபவம் உண்டா என்ற கேள்வி கேட்டகப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த வாணி போஜன் ” அப்படியெல்லாம் ஒன்றும் வரவில்லை. காதல் திருமணம் குறித்து நான் நினைத்து பார்த்தது கூட இல்லை. இப்போதைக்கு எனக்கு சினிமாதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

காதல் திருமணம் குறித்து நினைத்து பார்த்தது கூட இல்லை – வாணி போஜன்..!