நடிகை த்ரிஷாவுக்கு அந்த பழக்கம் இருக்கு! அதான் இப்படி இருக்காரு..பகீரை கிளப்பிய பயில்வான்!

Trisha Krishnan

நடிகை த்ரிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ -என்ட்ரி கொடுத்து தற்போது மீண்டும் பெரிய பெரிய படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் , த்ரிஷாவுக்கு மது பழக்கம் இருந்ததாகவும் , இதன் காரணமாகத்தான் அவருடைய உடல் எடை அதிகரிக்காமல் இருக்கிறது எனவும் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்து பகீரை கிளப்பியுள்ளார். ஒருமுறை நடிகை த்ரிஷா மிகவும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இரண்டு  முறை நீலாங்கரை ரோட்டில் நடனமாடியுள்ளாராம்.  அதுவும் போதையில் ஆடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்  ” த்ரிஷா நன்றாக மது குடிப்பார் உடலை ஒல்லியாக தான் வைத்திருக்கிறார். அவர் குடிப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். இரண்டு முறை நீலாங்கரை ரோட்டில் காவல் நிலையத்திற்கு முன்பு போதையில் நடனம் ஆடி இருக்கிறார்.

பிறகு அங்கிருந்த இன்ஸ்பெக்டர் வந்து நடுரோட்டில் இப்படியா என்னம்மா இப்படி என்று கூறி அவரை வீட்டில் சென்றுவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.  மேலும் த்ரிஷா மது குடிப்பதாக நடிகர்  பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது த்ரிஷா ரசிகர்கள்  அனைவர்க்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சும்மா எதையாவது சொல்லாதீங்க என்பது போல அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும், திரிஷா தற்போது விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்