சென்னை :சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தை நம்மளால் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. காதல், துரோகம், காமெடி என அனைத்து விஷயங்கள் நிரம்பிய தரமான படத்தை சசிகுமார் கொடுத்திருந்தார். படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இன்றுவரை பெரிய அளவில் பேசப்படக்கூடிய படமாக இருக்கிறது.
இந்த படத்தினுடைய க்ளைமாக்ஸ் காட்சியை பார்க்கும்போது எந்த அளவுக்கு எமோஷனலாக இருக்கும் என்பதை பற்றி வார்த்தையால் சொல்லவே முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை நம்மளுடைய மனதில் ஏற்படுத்தியது. இந்த இறுதிக்காட்சி இப்படி தான் இருக்கும் என நடிகை சுவாதியிடம் சசிகுமார் சொல்லவில்லையாம்.
அந்த காட்சியை எடுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான், நடிகை சுவாதியிடம் இப்படியான காட்சி வரும் என எடுத்துரைத்தாராம். சசிகுமார் திடீரென இப்படி கூறியவுடன் நடிகை சுவாதி கண்கலங்கி அழுதுவிட்டாராம். சரி நம்ம கதையை கேட்டுதான் அழுகின்றது போல என்று சசிகுமார் நினைத்தாராம். அதன்பிறகு சசிகுமாருக்கு கால் செய்துHAPPY ENDINGதானே சொன்னீர்கள் என்று சுவாதி கேட்டாராம்.
HAPPY ENDINGஎன்று சொல்லிவிட்டு என்னை கடைசியில் முதுகில் குத்த வைத்துவிட்டீர்களே என்று வருத்தப்பட்டு பேசினாராம். இதனை கேட்ட சசிகுமார்“YES HAPPY ENDING FOR YOU “என தன்னுடைய பாணியில் கூறினாராம். இந்த தகவலை சசிகுமார் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தபேட்டியில் தெரிவித்துள்ளார்.
