நடிகை சன்னி லியோனை கைது செய்ய தடை..!

Kerala High Court has issued an interim stay on the arrest of actress Sunny Leone in a Rs 29 lakh fraud case.

ரூ.29 லட்சம் மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோனை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை சன்னி லியோன் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டுள்ளது.

சன்னி லியோன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 29 லட்சம் ரூபாய்  பெற்றுக்கொண்டு பின் கலந்துகொள்ளவில்லை என எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர்  புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை சன்னி லியோன் மறுத்த நிலையில் கேரளா உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இதைத்தொடர்ந்து, சன்னி லியோன் முன் ஜாமீன் கோரினார். அதில் அமைப்பாளரின்  குறைபாடு காரணமாக நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டதாகவும், நான் பல முறை தனது கால அட்டவணையை மாற்றினேன். ஆனால் அவர்கள் தேதியை இறுதி செய்யவில்லை என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.