நிர்வாண காட்சியில் நடிக்க கணவர் ஊக்குவித்தார்! சரண்யா ஓபன் டாக்!

saranya pradeep

இயக்குனர் துஷ்யந்த் கடிகனேனி இயக்கத்தில் சுஹாஸ், ஷிவானி, சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி பிப்ரவரி 2-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் அம்பாஜி பேடா மேரேஜ் பேண்ட். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஹிட் ஆனது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், அம்பாஜி பேடா மேரேஜ் பேண்ட் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி நடிகை சரண்யா பிரதீப் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அந்தக் காட்சியைப் பற்றி இயக்குநர் என்னிடம் சொன்னபோது, கொஞ்சம் பயமாக இருந்தது. அப்படி ஒரு காட்சியில் நான் இதுவரை நடித்ததில்லை.

பயத்தைப் போக்கி எனக்கு ஆதரவாக இருந்தவர் என் கணவர். ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு குணம் கொண்டவர். தைரியமாக நடிக்க என் கணவர் என்னை ஊக்குவித்தார். படக்குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தது. அந்த காட்சியில் நடிக்கும் போது படப்பிடிப்பில் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். டி.வி.பி., டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், அசிஸ்டெண்ட்ஸ், இன்னொருத்தர்.

கிராமி விருது வென்ற சக்தி இசைக்குழுவுக்கு ஏ. ஆர். ரகுமான் வாழ்த்து.!

பேர் முன்னிலையில ரொம்ப வசதியா அந்தக் காட்சியில நடிச்சேன். குழுவினரின் ஒத்துழைப்பால் அந்த காட்சி சரியாக வந்தது. படத்திற்கு அந்த காட்சி தேவைப்பட்டதால் காரணத்தால் தான் நான் அந்த மாதிரி நடித்தேன்” எனவும் நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சரண்யா, பிறகு திரைப்படங்களில் நுழைந்தார். ஃபிதா படத்தின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்றார் சரண்யா. அந்த படத்தில் சாய் பல்லவி அக்காவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்