போதை பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்.!

Popular Kannada actress Sanjana Kalrani, who was arrested last September in a drug case, has been granted bail.

போதைப் பொருள் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கைதான பிரபல கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் காதலியும் ,நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது .அதனை தொடர்ந்து இந்த போதை பொருள் வழக்கு தொடர்பாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோனே,ரகுல் ப்ரீத்தி சிங்,சாரா அலிகான் உள்ளிட்ட பலருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர் .

அதனையடுத்து கன்னட திரையுலகிலும் போதை பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து பிரபல கன்னட நடிகைகளான ராதிகா திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரையும் ,அவரது நண்பர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இருவரும் பலமுறை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர் .ஆனால் அதனை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் .அது இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .விசாரணையில் போதைப் பொருள் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.