நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று...!

Actress Sameera Reddy, who has acted in Tamil and Bollywood films, has been diagnosed with corona infection.

தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பல அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழில் வாரணம் ஆயிரம்,வெடி மற்றும் வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சமீரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதனால்,என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.இருப்பினும்,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நான் பாதுகாப்பாகவே உள்ளேன்.அதுபோல நீங்களும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்”,என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.