இதற்காகவா நடிகை சமந்தா கதறி கதறி அழுதார்!
நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் “மஜிலி” திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இவர் மஜிலி படம் ரிலீஸாகும் அன்று அதிகாலையிலே எழுந்து படத்தின் வெற்றி பெற வேண்டியும் மற்றும் அவரது கணவர் நாகசைதன்யாவிற்காகவும் பிரார்த்தனை செய்தாராம். மேலும் இந்த படம் வெற்றி பெற்ற செய்தியை கேட்டதும் நடிகை சமந்தா கதறி கதறி அழுதாராம் என்று கூறியுள்ளார்.