சந்தோஷத்தின் உச்சியில் சாக்ஷி அகர்வால்? எல்லாத்துக்கும் காரணம் கவர்ச்சி போட்டோ தான்…

sakshi agarwal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பும் பின்பும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், முழுவதுமாக ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வரவில்லை என்றே சொல்லவேண்டும்.

சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சாக்ஷி அகர்வால் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களும் அந்த அளவிற்கு கவர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லவேண்டும். இருந்தாலும் அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாகவே வருத்தத்தில் இருந்தாராம்.

ஆனால், தற்போது சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறாராம். அதன்படி, அவர் தமிழில் மட்டுமில்லாமல் ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஹீரோயினாக  களமிறங்கவிருக்கிறாம். அதன்படி, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மருமகன் (தங்கை மகன்)  ஹீரோவாக நடிக்கும் புது படத்தில் அவருக்கு ஜோடியாக  சாக்ஷி அகர்வால் நடிக்கிறார்.

பிரமாண்டமாக நடைபெறும் நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்! எப்போது தெரியுமா?

அந்த திரைப்படத்தில்  சாக்ஷி அகர்வால் கிராமத்து பெண்ணாக நடிக்கவுள்ளார்.அதேபோல் பிரபல கன்னட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தயாரிக்கும் படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வாலுக்கு பாலிவுட்டில் புதிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சாக்ஷி அகர்வாலும் விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறதாம். பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த சாக்ஷி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வந்த நிலையில், அவருக்கு கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டதன் பலனாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறது.

இதனால் சாக்ஷி அகர்வால் மற்றும் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  மேலும், சாக்ஷி அகர்வால் தற்போது தமிழில் தி நைட் , புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்