தங்கையின் திருமண நிச்சயத்தில் நடிகை சாய் பல்லவி! கியூட் க்ளிக்ஸ் இதோ!
நடிகையும் சாய் பல்லவியின் தங்கையுமான பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களுடைய திருமண நிச்சியதார்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது. சாய்பல்லவி நன்றாக நடனம் ஆட கூடிய ஒரு நடிகை எனவே தனது தங்கையின் நிச்சியதார்த்த விழாவில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக கூட்டமாக நடனமும் ஆடி இருந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே தங்கையின் நிச்சியத்தில் சாய் பல்லவி நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது திருமண நிச்சியத்தில் தனது தங்கையுடன் சாய்பல்லவி எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
தங்கைக்கு மெஹந்தி போட்டுவிடுவது மேக்கப் போட்டுவிடுவது என சாய்பல்லவியின் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அத்துடன் நிச்சியதார்த்த நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் சாய்பல்லவி புகைப்படம் எடுத்து இருக்கிறார்.
மேலும், தங்கைக்கு திருமணம் முடிந்துவிட்டது உங்களுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் சாய் பல்லவியிடம் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள். சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.