சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் விரைவில் துவங்குமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தனுஷ் – சேகர் கம்முலா இணையும் கூட்டணிக்கு தற்காலிகமாக ‘டி51’ என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
முன்னதாக, இப்படத்தில் நடிக்க பழம்பெரும் நடிகர் நாகார்ஜுனா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகினது.
unknown nodeஅதன்படி, தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
unknown nodeD51 -Rashmika Mandanna [Image source :@dhanushkraja]
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.
unknown nodeஏற்கனவே கோடி படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் முக்கிய அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
