உடலளவிலும் மனதளவிலும் ஜெயலலிதாவாக மாறிய நடிகை நித்யா மேனன்…!!!
இயக்குனர் விஜய் அவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் உள்ளன. இந்த படத்தில் முதல் பாதி ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை பற்றியும், இரண்டாவது பாதி அரசியல் வாழ்க்கை பற்றியும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நடிகை நித்யா மேனன் இந்த படம் குறித்து கூறுகையில், உடலளவிலும், மனதளவிலும் ஜெயலலிதாவாக மாறிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். படத்தில் எந்த இடத்திலும் நித்யா மேனனாக தெரிய கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம்.
SOURCE : TAMIL.CINEBAR.IN