தனுஷிற்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி ஷெட்டி..??

It has been reported that actress Keerthi Shetty will be paired with Dhanush in a new film.

தனுஷிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவிற்கு சென்று தி க்ரே மேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு D43 படத்தின் இரண்டாவது கட்ட படத்தில் கலந்துகொள்வார். அந்த படத்தில் நடித்து முடித்தவுடன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார்.  அதற்கு பிறகு, மித்ரன் ஜவஹர், ராம்குமார், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது, ஆனால் இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதது தான் உண்மை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் உப்பெனா படம் மூலம் புகழ்பெற்ற கீர்த்தி ஷெட்டி தனுஷிற்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.