நடிகை சித்ராவின் உடற்கூராய்வு தொடக்கம்.!

The autopsy of Chitra, who committed suicide by hanging herself in a hotel, has started at the keelpaakam Hospital in Chennai.

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடற்கூராய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் இது கொலையா ?தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது .அதன்படி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடற்கூராய்வு தொடங்கப்பட்டுள்ளது .இந்த பிரதே பரிசோதனை அறிக்கை மூலம் சித்ராவில் மரணத்தில் உள்ள மர்மம் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.