வேறொரு பெண்ணுடன் தொடர்பு? கணவருடன் விவாகரத்து? நடிகை அசின் சொல்வேதென்ன….

asin husband rahul sharma

நடிகை அசின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால், விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை அசின் தனது கணவர் ராகுல் ஷர்மாவிடமிருந்து விவாகரத்து செய்யப் போவதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முக்கிய காரணம், அசின் தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் இருந்து தனது திருமண புகைப்படங்கள் உட்பட அவரது கணவரின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதற்கிடையில், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் நடிகை அசின் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Asin Thottumkal (@simply.asin)

மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அசின் அறிமுகமானா அசின்,தமிழில் சினிமாவில் கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். கஜினி  பட இந்தி ரீமேக்கில் அமீர்கானுக்கு ஜோடியாக நடித்த அவர், பாலிவுட்டிலும் பெரிய நடிகையாக உருவெடுத்தார்.

Asin husband
Asin husband [Image source : Twitter/REUTERS]

அசின் – ராகுல் ஷர்மா காதல் கதை:

ராகுலும் அசினும் முதலில் அக்ஷய் குமார் மூலம் தான் சந்தித்து கொண்டனர். அதன் பிறகு, இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். பின்னர், தொடர் சந்திப்புகளும் பேச்சுக்களும் அதிகரித்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். 2016 ஆம் ஆண்டு அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆறு வயதில் ஆரின் என்ற மகள் உள்ளார்.

Asin husband
Asin husband [Image source : NPCIL ]

விவாகரத்து வதந்தி:

இப்போது தனது கணவருடான விவாகரத்து வதந்திகளுக்கு சிக்கியுள்ளார் நடிகை அசினின், அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது திரைப்பட வாழ்க்கை மற்றும் அவரது சிறிய மகளின் படங்கள் மட்டுமே உள்ளன.  கடைசி புகைப்படம் மகள் ஆரின் ஐந்தாவது பிறந்தநாளுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் மறைந்த நடிகர் ரிஷி கபூருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராகுல் ஷர்மா இருக்கும் ஒரே புகைப்படம் இருக்கிறது.

Asin husband
Asin husband [Image-IndiaToday]
வதந்திக்குக்கு முற்றுப்புள்ளி வைத்த அசின்: 

அசின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், “இப்போது எங்கள் கோடை விடுமுறையில் காலை உணவை பகிர்ந்து கொண்டிருக்கும்போது, ​​சில கற்பனையான…முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை பார்த்தேன். நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கேள்விப்பட்டோம்…. உங்களுக்கு வேற வேலை இல்லையா? தயவு செய்து இப்படி பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், நீங்கள் பரப்பிய செய்தி பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது வேற ஏதும் வேலை இருந்தால் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Asin
Asin [Imagesource : instagram/@Asin]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்