Mari Selvaraj: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
READ MORE –இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்!
unknown nodeநடிகர் துருவ் விக்ரம் கடைசியாக விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘மகான்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியால் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படத்தின் கதையானது, அர்ஜுனா விருது பெற்ற தமிழக கபடி வீராங்கனை மானாதி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
READ MORE –ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?
பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமும் கிரிமினல் ஜஸ்டிஸ், ஸ்கேம் 1992 போன்ற பிரபல வெப் சீரிஸ்களை தயாரித்த அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. முன்னதாக, அசோக் செல்வனின் போர்த்தொழில் மற்றும் சோனி எல்ஐவி தொடர் இரு துருவம் 2 ஆகியவற்றை தயாரித்தன் மூலம் ப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
READ MORE –ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ…
இதனிடையே, இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து இயக்கும் ‘தங்கலன்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் . இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
