எனக்கு கிடைச்ச பரிசு இது! நடிகை அனுபமா உருக்கம்!

Anupama Parameswaran நடிகை அனுபமா தற்போது நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர்

Anupama Parameswaran

Anupama Parameswaranநடிகை அனுபமா தற்போது நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கபடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

READ MORE –ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ…

ஆனால், இயக்குனர் மாரிச்செல்வராஜ் சற்று பிசியாக இருந்த காரணத்தால் படம் தொடங்கப்படாமலே இருந்தது என்று கூட சொல்லலாம். பிறகு ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் படத்தில் நடிகை அனுபமா இணைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

READ MORE –இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்!

இந்த நிலையில், இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசிய நடிகை அனுபமா ” இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. இந்தப் படம் எனது கேரியருக்கு நல்ல பரிசாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்த மாதிரி படத்தில் நடிப்பது எல்லாம் சாதாரண ஒரு விஷயம் எல்லாம் இல்லை. கபடி விளையாட்டின் தோற்றத்தை இந்தப் படம் சொல்லும்.

இந்தப் படம் என்னுடைய கேரியர் மற்றுமின்றி, படத்தில் நடித்த பிரபலங்கள் சினிமா கேரியரில் ஒரு மைல் கல்லாக இருக்கும். அந்த அளவிற்கு படம் நல்ல கதையை கொண்டு இருக்கிறது” எனவும் அனுபமா தெரிவித்துள்ளார்.  மேலும் நடிகை அனுபமா கடைசியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக சைரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.