விபத்து...! நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி.!

தங்கலான் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம்.

Chiyaan vikram

தங்கலான் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம்.

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

Thangalaan [Image source : Twiter /@George ]

தற்போது, தங்கலான் படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு”விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் விக்ரம். இதனால், சிறிது நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என நடிகர் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

படத்திற்காக எந்த அளவிற்கு படக்குழு கடினமாக உழைத்துள்ளார்கள் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் தெரிகிறது. இதற்கிடையில்,  விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சைக்கை போடு போட்டு வருகிறது.

unknown node

PS2 From Today [Image Source : Twitter/ @LycaProductions]

விபத்தை அறிவித்த விக்ரமின் மேலாளர், பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் பெற்ற அன்பு மற்றும் பாராட்டுக்களுக்கும், உலகம் முழுவதிலுமிருந்து PS2-வுக்கு கிடைக்கும் வியக்க வைக்கும் வரவேற்புக்கும் விக்ரம் தனது நன்றிகளை பகிர்ந்துள்ளார் எனவும்  பகிர்ந்து கொண்டார்.