புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியை ரோபோ சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தவசி தற்போது முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. . உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் உதவ கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-ஆன மருத்துவர் சர்வணன் மதுரையில் உள்ள தனது மருத்துவமனையில் தவசியை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை வழங்கி உதவி வருகின்றனர்.ஏற்கனவே சூரி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் சிம்பு உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது நடிகை ரோபோ சங்கர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியை மதுரையில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் பழைய கறுப்பனாக வர வேண்டும் என்று தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். மேலும் அவரது மருத்துவ செலவிற்கு உதவித்தொகை வழங்கி உதவியதுடன் ,அந்த மீசையை நாங்க பாக்கனும் , விரைவில் மீண்டு வருவேன்னு சொல்லுங்க என்று கூற தவசியும் Iam Back என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.