நடிகர் சூர்யாவின் கையில் புதிய டாட்டூ…இணையத்தை கலக்கும் புகைப்படம்!

suriya

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா.  இப்படத்தில் கோவை சரளா, ஜிஷு சென்குப்தா, யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் மற்றும் அசல் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இதற்கிடையில், 10 ஒவர்கள் கொண்ட இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) தொடர், வரும் மார்ச் 2 முதல் 9ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. டென்னிஸ் பந்தில் நடைபெறும் இத்தொடரில் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு சார்பாக களமிறங்க உள்ள சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இத்தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளது.  வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக  விளையாட ஆர்வம் உள்ளவர்கள் சூர்யா கொடுத்துள்ள அந்த லிங்கிற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த அறிவிப்பை அறிவிக்கும் வகையில் தனது X தள பக்கத்தில், அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

அந்த புகைப்படத்தின் முழு புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தனது கையில் புதிய டாட்டூ ஒன்றை குத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், இது உண்மையான டாட்டூ வா? இல்லையென்றால், விளம்பரத்துக்காக என்று தெரியவில்லை.

suriya
suriya [File Image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்