விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்த சூர்யா, அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “வணங்கான்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
unknown nodeஇந்த நிலையில், நடிகர் சூர்யா கோட்ஷூட் அணிந்து முறுக்கு மீசையுடன் கெத்தான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
unknown nodeஇந்த கெட்டப் எதற்காகவென்றால், அக்ஷ்ய குமார் நடித்து வரும் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். அதற்கான லுக்கில் தான் சூர்யா தற்போது இருக்கிறார். இந்த படத்தை சுதா கொங்கராவே இயக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.