தேள் கொடுக்கு ரெடி! ரசிகர்களுக்கு ரோலக்ஸ் அப்டேட் கொடுத்த சூர்யா!

சமீபத்தில், தனது ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் சூர்யா, சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்றை தெறித்திருக்கிறார். அதாவது, விக்ரம் படத்தில் வரும் "ரோலக்ஸ்"

Featured image

சமீபத்தில், தனது ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் சூர்யா, சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்றை தெறித்திருக்கிறார். அதாவது, விக்ரம் படத்தில் வரும் “ரோலக்ஸ்” கதாபாத்திரத்தை வைத்து தனி படமாக உருவாக உள்ளதாகவும், அதில் தான் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஒரு பக்கம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவான லியோ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மறுபக்கம், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது.

unknown node

Rolex – suriya [File Image ]

சூர்யா கொடுத்த புதுப்பட அப்டேட்:

இந்த நிலையில், ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் சூர்யா, தனது வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றி சில அப்டேட்களை பகிர்ந்து கொண்டார். அதில், சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் இருப்பதாகவும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உள்ளது. இது விடுதலை இரண்டாம் பாகம் முடிந்த பின் தொடரும்.

மேலும், லோகேஷ் கனகராஜிடம் ‘இரும்பு கை மாயாவி’ மற்றும் ‘ரோலக்ஸ்’ படம் உள்ளிட்ட கதைகளை கேட்டுள்ளதாக, சென்னையில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் பேசியிருக்கிறார். மேலும், இந்த இரண்டு கதையில் எந்த படத்தில் முதலில் நடிக்கலாம் என ரசிகர்களிடம் சூர்யா கேட்க, ரோலக்ஸ் ரோலக்ஸ் என கூச்சலிட, ஓகே என சூர்யா கூறியுள்ளார்.

unknown node

Rolex [File Image ]

உருவாகிறது ‘ரோலக்ஸ்’ திரைப்படம்:

ஆம்…’ரோலக்ஸ்’ கதாபாத்திரம் தனி படமாக உருவாக இருப்பதாகவும், இந்நிலையில், அந்த படத்தின் கதை ஒன்றை லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கூறியதாகவும், அதில் தான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சூர்யா கூறியுள்ளார். இது சூர்யா ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

Rolex [File Image ]

ரோலக்ஸ்

நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் உலகளவில் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக, படத்தில் வரும் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகின்றனர். விக்ரம் படத்தின் இறுதியாக வரும் 7 நிமிட கட்சியில் மட்டும் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். அந்த 7 நிமிட காட்சியை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் கை தட்டகள் நிற்கவே இல்லை. அந்த அளவிற்கு கொடூர வில்லனாக சூர்யா மிரட்டி இருந்தார் என்றே சொல்லாம்.