பழைய இடத்தை பிடிக்க வரும் சிம்பு…!!! தமிழ் சினிமா தக்க வைக்குமா…!!! கோவில் கூட்டணி மீண்டும் இணைந்தது…!!!

Default Image

தமிழ் சினிமாவின் இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு. இவருக்கு  ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில்,சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம்  ‘வந்தா ராஜாவாக வருவேன்’. இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்,

 

Image result for SIMBU

என்றாலும்  தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவே இல்லை. இதேபோல்  நடிகர் சிம்பு, இயக்குனர்  கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘முப்ஃடி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அறிவித்தார். அதுபோக நடிகர் சிம்பு  ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக் படத்தில் நடிக்க  நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியிருப்பதகவும்  சொல்லப்பட்டது.இந்நிலையில் இந்த படங்கள் மட்டுமல்லாமல்  சிம்பு தற்போது  வேறொரு படத்திலும்  ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Image result for SIMBU

தமிழ் சினிமா வரலாற்றில் பல்வேறு  வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர்  ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.எனவே  இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் ஏற்கனவே மாஸ் ஹிட் காட்டிய  ‘கோவில்’ படத்தில் இணைந்திருந்த நிலையில் அந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்