சிம்பு சுந்தர் சி. இயக்கத்தில் ‘ வந்தா ராஜாவாதான் வருவேன் ‘ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர் முதலியவர்கள் நடித்துள்ளனர். பிப்ரவரி மாதம் 1ம் தேதி இந்த படம் ரிலீஸாக இருக்கிறது . இந்த படத்தில் உள்ள ‘வாங்க மச்சான் வாங்க பாடல் ‘நேற்று ரிலீஸாகியுள்ளது.மேலும் இந்த படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சிம்பு தனது படம் வெளி வரும் நாளில் தனக்கு பெரிய கட் அவுட் வைக்க வேண்டும். மேலும் சிம்பு அண்டா அண்டாவாக பால் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவத்தை கண்டித்து பால் முகவர்கள் சங்கம் நடிகர் சிம்பு மீது புகார் அளித்துள்ளனர். பால் முகவர்கள் சங்கம் எங்களது கடையில் சிம்புவின் திரைப்படம் வெளியாகும் நாளில் பால் திருடு போகாமல் தடுக்க வேண்டும் என பால் முகவர் சங்க தலைவர் பொன்னுச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.