பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ஷாருக்கான் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100-ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பிரதமர் மோடி அவர்களின் தாயார் ஹீராபென் ஜியின் மறைவுக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள். என் குடும்பத்தாரின் பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளது ஐயா. கடவுள் அவர்களுடைய ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

unknown node