தினக்கூலி பணியாளர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்திய நடிகர் சல்மான்கான்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை யாருமே வேலைக்கு இயலாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், பிரபலங்கள் பலரும் ஏழை மாக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சல்மான்கான் திரைத்துறையில் பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000தினக்கூலி பணியாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3,000-ஐ செலுத்தியுள்ளார்.