பெயர் குறிப்பிடாமல் குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கும், அவரது தொண்டருக்கும் எச்சரிக்கை விடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ் !
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் அரசியல் தலைவருக்கும், அந்த அரசியல் தலைவரின் தொண்டர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்றும், அவர்களை கொச்சைப்படுத்தும் வண்ணம் பேசாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.