நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி...!!

Telugu actor Pawan Kalyan's corona infection has been confirmed

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யானுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களின் முழு ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் நடிகர் பவன் கல்யாண் குணமடைந்து வீடு திரும்ப நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.