"சிறிய வயது நினைவுக்கு வந்தது " புளி மரத்தில் தொங்கும் நடிகர் கார்த்தி.!!

Actor Karthi has posted a photo of himself hanging from a tamarind tree in his native village on his Instagram page.

நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொந்த கிராமத்தில் உள்ள புளி மரத்தில் தொங்கிய  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த  படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 22 வது படத்தில் நடிக்க இணைந்து விடுவார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புளி மரத்தில் தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் ” நான் சிறிய வயதில் புளிய மரத்தில் ஏறியிருக்கிறேன். தற்போது எனது சொந்த கிராமத்தில் உள்ள புளி மரத்தில் ஏறியுள்ளேன். எனது சிறிய வயது நினைவு தற்போது எனக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node