நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துளளார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார். அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், தம்பி அஜித்குமாரின் அப்பா சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன், தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node