கர்ணன் டீசர் குறித்து நடிகர் தனுஷ் ட்வீட்...!

Dhanush tweeted that the teaser of the movie Karnan starring Dhanush will be released soon

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் டீசர் மிக விரைவில் என்று தனுஷ் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திலிருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் மற்றும் பண்டராத்தி புராணம் என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் அடுத்ததாக காத்திருக்கும் ஒரே அப்டேட் டீசர் தான். அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கர்ணன் டீசர் மிக விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.

unknown node