#Breaking:நடிகரும்,விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு...!

Actor and critic Venkat Suba have passed away today.

நடிகரும்,விமர்சகருமான வெங்கட் சுபா இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.குறிப்பாக,கடந்த சில வாரங்களாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

அந்த வகையில்,நடிகரும்,பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சுபா,கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு,சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா இன்று உயிரிழந்தார்.

வெங்கட் சுபா பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார்.யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்தார்.மேலும், மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து,மறைந்த வெங்கட்  அவர்களின் குடும்பத்திற்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எனினும்,கொரோனாவால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.