நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் அஜித்தை பொறுத்தவரையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மக்களை தாண்டி, பல சினிமா பிரபலங்கள் கூட இவரது ரசிகராக உள்ளனர்.
இந்நிலையில், தற்போது அஜித் நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். அஜித்தின் பிறந்தநாளான இன்று இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது ட்வீட்டர் பக்கத்தில், “அஜித் சாரை பற்றி கூற 280 கேரக்டர்ஸ் போதாது” என கலக்கலான பதிவினை பதிவிட்டுள்ளார்.
unknown node