அஜித்தின் தந்தை உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்.! குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்பு.!

நடிகர் அஜித்குமாரின் தந்தை இறுதி ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்  பங்கேற்பு.

நடிகர் அஜித்குமாரின் தந்தை இறுதி ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்  பங்கேற்பு.

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார்.

தற்போது, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இருந்து, தந்தையின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். மேலும், நடிகர் அஜித் தனது தந்தை உடலை பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் தூக்கி சென்றார். இன்னும் சற்று நேரத்தில் அஜித்தின் தந்தை உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில், அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருப்பதாக கேட்டுக்கொண்டார். இந்நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.