சென்னை:வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மறைந்த முன்னால் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற “மஞ்சள் பூசும், மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி..” பாடலும் தற்போது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது நாவுகளும் இந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், அந்த படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜின் குட்டி மகன் இந்த பாடலை மெய் மறந்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி இருக்கிறது.
கண்களை மூடிக்கொண்டு பாடலின் வரிகளையும், ராகத்தையும் ரசித்தபடி மழலை மொழியில் கொஞ்சி கொஞ்சி அவர் பாடி இருக்கும் மஞ்சள் பூசும் பாடல் அவ்வளவு அழகாக இருக்கிறது என நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டுமா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற வகையில் மாரி செல்வராஜையும் புகழ்ந்து வருகின்றனர்.
இன்றைய இணையதள வைரல் செலிபிரிட்டியாக மாரி இருக்கும் மாரி செல்வராஜின் மகன், வரும் காலத்தில் கலைத்துறையில் சிறந்த நபராக விளங்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
unknown node