அமீர் கான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த 'சுஹானி பட்நாகர்' உயிரிழந்தார்.!

அமீர் கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சுஹானி பட்நாகர் டெல்லியில் இன்று (பிப்ரவரி 17 ) உயிரிழந்துள்ளார். அந்த

Suhani Bhatnagar

அமீர் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சுஹானி பட்நாகர் டெல்லியில் இன்று (பிப்ரவரி 17 ) உயிரிழந்துள்ளார். அந்த சிறுமிக்கு வயது 19, அவரது உயிரிழப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், அவர் தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது உயிரிழப்பு குறித்து, அமீர் கானுடைய தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் சுஹானிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

அண்மையில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அந்த சிகிசைக்கான மருந்து உட்கொண்டு வந்த நிலையில், அது பக்க விளைவுகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என கிசுகிடுக்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மாந்திரீகனாக மிரட்டிய மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தின் இரண்டு நாள் வசூல்.!

இந்நிலையில், அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில், ‘எங்கள் சுஹானியின் மறைவ செய்தி கேட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவரது தாயார் மற்றும் முழு குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தகைய திறமையான இளம் பெண், தங்கல் சுஹானி இல்லாமல் முழுமையடையவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

unknown node

Dangal actor Suhani Bhatnagar[Image source:@AamirKhan’sproduction]